காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி கடலில் இறங்கி போராட்டம் படங்கள் இணைப்புகாரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ....  கடலில் இறங்கி  போராட்டம் நடந்தது

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மத்திய பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளதை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படப்போகும் விபரீதங்களை மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வந்தது. இந்நிலையில் மக்களின் மன நிலையை அறியாமல், ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

எனவே, காரைக்கால் பகுதி மக்களின் நலனில் அக்கறை இல்லாமல், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய பிஜேபி அரசை கண்டித்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியினர் காரைக்காலில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமை வகித்தார், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல்  ரஹீம், தமுமுக மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஹாஜா மெய்தீன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், மெய்தீன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பொய்யாதமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மமகவினர் கலைந்து சென்றனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.