அபுதாபியில் உயிரிழந்து ஒரத்தநாடு சாமிநாதன்! உடலை இந்தியாவுக்கு அனுப்பிய அமீரக காயிதே மில்லத் பேரவை!அமீரக காயிதே மில்லத் பேரவை – கேஎம்சிசி நிர்வாகிகள் முயற்சியால் அபுதாபியில் மரணமடைந்த தஞ்சை சாமிநாதன் உடல் தாயகம் கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள மேலையூர் கிராமத்தைச் சார்ந்த சாமிநாதன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் அபுதாபியில் மரணமடைந்தார். அவரது உடல் ஷேக் கலீஃபா மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. தாயகத்தில் இருந்து அவரது உறவினர்கள் பிரதத்தை அனுப்பி வைக்க உதவி நாடினர்.

அரசுமுறை சம்பிரதாயங்களை நிறைவு செய்து ஆவணங்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை கேஎம்சிசி நிர்வாகத்தோடு இணைந்து மேற்கொண்டது. சாமிநாதன் உடலை தாயகத்தில் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பாக்கியராஜ் என்பவரையும் அனுப்பி வைத்தனர்.

இப்பணிகளை மேற்கொண்ட அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, கேம்சிசி நிர்வாகி அபூபக்கர், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் சாதிக் பாட்ஷா ஆகியோருக்கு மறைந்த சாமிநாதன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.