டீ, காபி விலையும் உயர்கிறது…!பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு எனும் காரணத்தைக் காட்டி, ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டோட்‌லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள், நாளை நள்ளிரவு முதல் பால் விற்பனை விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையும், தயிருக்கான விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்போவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலை உயரும் அபாயம் இருப்பதாகவும், இந்த பால் விலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.