ஆர்.கே.நகரில் கங்கை அமரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார்:- பொன்னார்ஆர்.கே.நகரில் கங்கை அமரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று கொருக்குப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. பாஜக சார்பில் மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்ட பலம்பொருந்திய தமிழகம் அறிந்த கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

இதுவரை எத்தனையோ கட்சிகளுக்கு வாய்ப்பளித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் இந்த முறை பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பாஜக வென்றால் ஆர்.கே.நகர் தொகுதியை தத்தெடுத்து முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்'' என்று கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.