உ.பி. முதல்-மந்திரியாக உள்ள யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா. ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. ‘முதல்–மந்திரி வேட்பாளர் இவர்தான்’ என ஒருவரை முன்னிலைப்படுத்தாமல், இந்த தேர்தலை சந்தித்தாலும் மொத்தம் உள்ள 403 இடங்களில் 312 இடங் களில் வெற்றி பெற்று பா. ஜனதா வரலாற்று சாதனை புரிந்தது. அதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் வென்றுள்ளன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதல்– மந்திரி நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார் என்று மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.

அதில் முதல் இடம் பிடித்தார் மடாதிபதி யோகி ஆதித்யநாத். லக்னோவில் இன்று நடக்கிற கோலாகல விழாவில் அவர் பதவி ஏற்கிறார். மேலும் 2 பேர் துணை முதல்–மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். மடாதிபதி யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

யோகி ஆதித்யநாத், இன்றைய உத்தரகாண்ட் மாநிலம், பாஞ்சூரில் 1972–ம் ஆண்டு, ஜூன் மாதம் 5–ந் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் அஜய்சிங்.  எச்.என்.பி. கார்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர். ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர். ‘இந்து யுவ வாஹினி’ என்ற சமூக, கலாசார அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். அத்துடன் கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். 1998–ம் ஆண்டு தனது 26–வது வயதிலேயே கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனவர். தொடர்ந்து 1999, 2004, 2009, 2014 தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.,யாக உள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் 5 சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்:-

சிறுபான்மையினர்:

சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் 2 1/2 வருடங்களில் மேற்கு உத்தரபிரதேசத்தில் 450 கலவர வழக்குகள் பதிவாகி உள்ளது, ஏனென்றால்  ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள்தொகை பன்மடங்கு அதிகரிப்பு காரணமாகவே. கிழக்கு உத்தரபிரதேசத்தில் வன்முறை இல்லாததற்கு காரணங்கள் என்ன? உங்களால் எளிதாக புரிந்துக் கொள்ளமுடியும். இங்கு 10-20 சதவிதம் மட்டுமே சிறுபான்மையின மக்கள் உள்ளனர், எப்பவாது மதவாத சம்பவங்கள் நடைபெறுகிறது. சிறுபான்மையினர் 20-35% உள்ள பகுதிகளில் தீவிர மதவாத கலவரங்கள் ஏற்படுகிறது, அவர்கள் 35 சதவிதத்திற்கு மேலாக உள்ள பகுதியில் இஸ்லாமியர்கள் இல்லாதவர்களுக்கு இடம்கிடையாது.

கைரானா வெளியேற்றம்:

 ”மேற்கு உத்தரபிரதேச மாநிலம் கைரானா பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கின்மையினால் மக்கள் ஊரை விட்டு வெளியேறு வருவது 27 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை போன்று கைரானாவில் இருந்து இந்துக்கள் வெளியேற்றப்படுகின்றனர். மேலும், இது போன்ற சூழல் கிழக்கு உத்தரபிரதேசத்தில் இல்லை, ஆனால் மேற்கு உத்தரபிரதேச பகுதியை பார்க்கும்போது பாதுகாப்பற்றதாக நான் உணர்கிறேன். மேற்கு உத்தரபிரதேசம் மற்றொரு காஷ்மீராக பாரதீய ஜனதா அனுமதிக்காது”

அன்னை தெரசா:

“அன்னை தெரசா மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்தியாவில் உள்ள மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற ரோமில் உள்ள கிறிஸ்தவ தலைமை திட்டமிட்டது. அன்னை தெராசா இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்கசதியின் ஒருபகுதியாக இருந்தது. சேவை என்ற பெயரில் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.”

யோகா:

“யோகாவை ஆரம்பித்த கடவுள் சங்கர் ஒரு மிகச் சிறந்த யோகி. மகாதேவ் நாட்டில் உள்ள அனைத்து பொருட்களிலும் வாழ்ந்து வருகிறார். எனவே, யோகாவையும் கடவுள் சங்கரையும் ஒதுக்க நினைப்பவர்கள் இந்துஸ்தானை விட்டும் செல்லலாம்.”

ஷாரூக்கான்:

“நாட்டில் உள்ள அவரது பெரும்பான்மையான ரசிகர்கள் கூட்டம் அவரது படங்களை புறக்கணித்தால் அவரும் கூட ஒரு சாதாரண முஸ்லிமாக தெருக்களில் அலைய வேண்டியதுதான். மதச்சார்பின்மை என்ற பெயரில் சிலர் தீவிர கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர், இவர்கள் தேச -விரோதிகளாகவே பேசி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களது எதிர்ப்புக்கு தனது ஆதரவுக்குரலை ஷாரூக்கான் தெரிவித்து தவறிழைக்கிறார். நான் கூறுகிறேன், இவர்கள் பயங்கரவாதிகளின் மொழியில் பேசுகின்றனர். ஷாரூக்கானின் மொழிக்கும் ஹபீஸ் சயீதின் மொழிக்கும் அதிக வித்தியாசமில்லை. இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை வரவேற்கிறோம். இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பவர்களுக்கு அப்போதாவது புரியும்.”
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.