துபாயில் பச்சிளம் குழந்தையை டக்ஸிக்குள் தவிக்கவிட்ட தம்பதி !துபாய்க்கு சுற்றுலா வந்திருந்த வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்புவதற்காக நேற்று 7 இருக்கைகள் கொண்ட டக்ஸி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி துபை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர், இவர்களை இறக்கிவிட்ட டக்ஸியும் அங்கிருந்து சென்றுவிட்டது.

விமான நிலையம் உள்ளே சென்றவுடன் தான் பெற்ற குழந்தையின் ஞாபகம் வர பதறித் தேடியவர்கள் விமான நிலைய போலீஸாரின் உதவியை நாட, அவர்கள் துபை போக்குவரத்துத் துறையின் (RTA) உதவியுடன் ஜிபிஎஸ் டிரேக்கிங் வழியாக டேக்ஸி டிரைவரை தொடர்பு கொண்டால் அவருக்கும் அதுவரை தெரியவில்லை குழந்தை தன்னுடைய காரின் பின்னிருக்கை சுகமாக உறங்கிக் கொண்டிருப்பது.

டேக்ஸி டிரைவர் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் குழந்தையை ஒப்படைக்க, போலீஸார் குழந்தையை விமான நிலையத்தில் 'தொலைத்து விட்டு' தவித்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் ஒப்படைக்க, ஒருவழியாக அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிடாமல் பெற்றோர் குழந்தையுடன் பறந்து சென்றனர்.

துபை போலீஸார் மற்றும் துபை போக்குவரத்துத் துறையின் மின்னல் வேக நடவடிக்கையால் குழந்தை உடன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பலரின் மனமுவந்த பாராட்டுக்களை அள்ளி வருகிறது. அதேநேரம் குழந்தை தாயுடன் உள்ளதாக தந்தையும், தந்தையுடன் உள்ளதாக தாயும் கருதியதே மறதிக்குக் காரணமாம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.