தினத்தந்தி நாளிதழுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள் !நேற்று வழி தவறி வந்த சிறுமியை அவர்களின் பெற்றோர்களை தேடி பிடித்து அவர்களின் வீட்டில் கொண்டு சேர்க்குபோது அவர்களின் வீடே பரபரப்பான சூழ்நிலையில் அழுகை சத்தத்துடன் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் நூற்றுக்கணக்கான பொது மக்களும் ஊடக செய்தியாளர்களும் நிறைந்திருந்தனர் .நாம் அந்த சிறுமியை அவர்கள் வீட்டில் கொண்டு ஒப்படைத்ததும் அந்த பொற்றோர்களுக்கு மகிழ்ச்சியில் ஒன்றும் புரியவில்லை அந்த சந்தோஷத்தில் நமது கால்வளில் விழுந்து கைகூப்பி நன்றி தெரிவித்தனர் .நாம் உடனே இப்படி மனிதர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் இதெல்லாம் தவறு எனவும் எடுத்துச்சொல்லி இதெல்லாம் மனிதாபிமான செயல் இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது எனவும் எடுத்துசொல்லி தஃவா செய்து கொண்டிருக்கும் போது தினகரன் பத்திரிகை செய்தியாளர் நம்மைப்பற்றி விசாரித்து போட்டோ எடுத்துக்கொண்டு பாராட்டு தெரிவித்துக்கொண்டு இஇருக்கும் போது தினத்தந்தி செய்தியாளர் வந்தவுடன் தினகரன் செய்தியாளர் போட்டோ எடுங்கள் விபரங்கள் சேகரித்து கொள்ளுங்கள் என சொன்னார் .

நாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லி அறிமுக படுத்திக்கொண்டதும் போட்டோவும் எடுக்கவில்லை விபரமும் கேட்கவில்லை இன்றைய நாளிதழில் அது குறித்த எந்த செய்தியும் இல்லை

இஸ்லாமிய மக்கள் குறித்த எந்தவொரு நல்ல செய்தியும் தங்களின் நாளிதழில் வெளிவந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தினத்தந்தி நாளிதழுக்கு நமது பாராட்டுக்கள் .

குறிப்பு : தினகரன் நாளிதழ் இந்த செய்தியை அரைப்பக்க அளவில் பிரசுரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.