ஒரத்தநாட்டில் சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற மகள்!ஓரத்தநாட்டில் மருத்துவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் மகள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சொத்துக்கு ஆசைப்பட்டு மகளே கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கல்லுக்கடைசந்து தெருவில் வசித்தவர் டாக்டர் ராஜப்பன். இவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  ஒரத்தநாடு பஸ்நிலையம் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கட்டிடத்தில் ராஜப்பன் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு தனது வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர் ராஜப்பனை 2 இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ராஜப்பனின் இளையமகள் தீபிகா மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் நண்பரின் உதவியுடன் கூலிப்படைக்கு 3லட்ச ரூபாய் கொடுத்து தந்தையை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

சிறுவயது முதலே போலியோவால் பாதிக்கப்பட்ட தமக்கும் தனது தாய்க்கும், தந்தை எந்த வித உதவியும் வழங்காததால் வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து தீபிகா அவரது நண்பர் பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.