முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் அவதிமுத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் அவதியடைகின்றனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடைபெறும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அறிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  தினசரி 350க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் உபாதை தொடர்பாக சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்க 2 பெண் டாக்டர்கள் உட்பட 7 டாக்டர்கள் ஏற்கனவே பணியிலிருந்தனர். கடந்த மாதம் பணியிட மாற்றம் மற்றும் மேல்படிப்பு தொடர்பாக 6 டாக்டர்கள் சென்றுவிட்டனர். இதனால் ஏழுடாக்டர்கள் பணியாற்றிய மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே தற்போது பணியில் உள்ளார். தினசரி அருகே உள்ள எடையூர் சித்தமல்லி மருத்துவமனையிலிருந்து தற்காலிகமாக பணிக்கு வரும் டாக்டர்கள் உதவியுடன் அனைத்து நோயாளிகளையும்  பரிசோதித்து சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது. அதிக அதிக நோயாளிகள்  வருகையால் பெயரளவுக்கே சிகிச்சை நடைபெறுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.