அமெரிக்க மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!அமெரிக்காவின் ஐந்து முக்கிய மசூதிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதில், ஒரு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது.

கென்டக்கி மாகாணத்திலுள்ள லெக்ஸிங்டன் மசூதிக்கு பச்சை நிற அட்டை ஒன்று வந்தது. அதில், 'விரைவில் இந்த மசூதியில் வெடிகுண்டு வைக்கப்படும்' என்று எழுதியிருந்தது.

மேலும், மற்ற நான்கு மசூதிகளுக்கு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளன. 'உங்களுக்கும், உங்கள் இனத்திற்குமான மரணம் காத்துக் கொண்டிருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 15-ம் தேதி, அமெரிக்காவிலிருக்கும் இஸ்லாமியர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அந்த மிரட்டல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்த மசூதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.