திருத்துறைப்பூண்டி நகரில் துணை மின்நிலையம் அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஆடலரசன் கேள்வி ?திருத்துறைப்பூண்டி நகரில் துணை மின்நிலையம் அமைக்கப்படுமா? என்று சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஆடலரசன் கேள்வி எழுப்பினார்.தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் (திமுக) நேற்று முன்தினம் பேசும்போது கூறியதாவது: திருத்துறைப்பூண்டி நகரில் தனியாக துணை மின் நிலையம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளாதா? திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கிராம புறத்திற்கும் நகர் புறத்திற்கும் இணைத்து ஒரே இடத்தில் மின்மாற்றி வைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்கே ஏற்படும் இடர்ப்பாடுகளால், ஒட்டுமொத்த கிராம புற, நகர் புற பகுதிகள் முற்றிலும், இருளில் மூழ்கக்கூடிய நிலை இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இன்னும் அதற்கான நிலம் கையகப்படுத்தாமல் உள்ளது. எனவே நிலத்தை உடனடியாக கையகப்படுத்தி அந்த பகுதிக்கு ஒரு துணை மின் நிலையத்தை வெகுவிரைவில் அமைத்து தரவேண்டும்.  அதேபோல் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளின் மேலே மின்சார கம்பிகள் செல்கின்றன. அந்த மின்சார கம்பிகள் ஒன்றோடென்று உரசி பல குடிசைகள் தீவிபத்து ஏற்படுகிறது. அங்கே வாழும் விவசாய கூலி தொழிலாளர்கள், தங்களுடைய உடமைகளை இழந்து,  இருகின்ற சான்றிதழ்களையும் இழந்து சாலையோரங்களில் குடியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு 90 சதவிதம் காரணம் மின்சார கம்பிகள் செல்கிற பாதைதான். இதை அரசு கவனத்தில் எடுத்துகொண்டு அந்த மின்சார கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய மின்சார துறை அமைச்சர் தங்கமணி, உறுப்பினர் கோரிக்கைகள் குறித்து தக்க நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என்றார்.

Thanks : தினகரன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.