ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அழிக்கப்படும்'- ட்ரம்ப் சபதம்ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி (Haider al- Abadi) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களும், பல்வேறு வெளியுறவுக் கொள்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினர். முக்கியமாக, மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈராக் பிரதமர் அபாதி, 'ஐ.எஸ் அமைப்பை அழிக்க அமெரிக்காவிடம் இருந்து ஆதரவு தொடர மட்டும் செய்யாது, மேலும், அதிகரிக்கும். ஆனால், தீவிரவாதம் என்பது ராணுவத்தினால் மட்டும் அழித்திட முடியாது' என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், 'ஐ.எஸ் அமைப்பை அழிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை.

அது மிகவும் கடினமானது. ஆனால், எங்கள் பிரதான நோக்கம் அந்த அமைப்பை வேரோடு அழிப்பது. அதை கண்டிப்பாக செய்து காட்டுவோம். அதற்கான செயல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது' என்று தெரிவித்தார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.