பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது இர்பான் விளையாட தற்காலிக தடைபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது  இர்பான் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் துபாயில் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இஸ்லமாபாத் யுனிடைடு அணிக்காக விளையாடிய முகம்மது இர்பானை சூதாட்ட தரர்கள் அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான தகவலை முகம்மது இர்பான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு நடத்தை விதியை மீறியதாக முகம்மது இர்பான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று கிரிக்கெட் வாரியத்தின் விசாரணைக்குழு முன் ஆஜரான முகம்மது இர்பான் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை ஒப்புக்கொண்டார். அண்மையில் தனது பெற்றோர் இறந்ததால் ஏற்பட்ட மன அழுத்த சூழலால் கிரிக்கெட் வாரியத்திடம் இந்த தகவலை சொல்ல இயலாத நிலை ஏற்பட்டதாகவும் விளக்கினர்.

இதையடுத்து, முகம்மது இர்பான்  கிரிக்கெட் விளையாட தற்காலிக தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இர்பான் தன் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய பதிலளிக்கவும் 14 நாட்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.