திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியரிடம் செயின் பறித்த ரியாஸ் அகமது, வெங்கடேஷ் கைதுதிருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியை சேர்ந்தர் வீரமணி மனைவி பாலா (45) கோட்டூர் ஒன்றியம் செருவாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016 ஆண்டு மே மாதம் பள்ளியிலிருந்து மாலையில் டூ வீலரில் வீடு திரும்பும் போது கோட்டூர் தாழந்திருவாசல் என்ற இடத்தில், இரண்டு மர்ம நபர்கள் தலைமையாசிரியரிடம் இருந்து 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் இன்ஸ்பெக்டர் லெட்சுமி, எஸ்ஐ வெங்கிடாசலம் மற்றும் போலீசார் திருபத்தூர் கடைவீதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த இருவரை விசாரித்தபோது முன்னுக்குப்பின் பதிலளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரியாஸ் அகமது (24), திருத்துறைப்பூண்டி வ.உ.சி. நகர் வெங்கடேஷ் (17) என்பதும், கடந்த 9 மாதங்களுக்கு முன் தலைமைஆசிரியரிடம் செயின் பறித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 பவுன் செயினை கைப்பற்றி ரியாஸ் அகமது, வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.