வக்ப் சொத்தை மீட்கும் முயற்சியில் சமுதாய அமைப்புக்கள்..!திருவள்ளூரில்...
சென்னை சில்க்ஸ்'-ன் பிடியிலிருந்து ₹ 100 கோடி மதிப்புடைய 'வக்ப்' சொத்தை மீட்கும் முயற்சியில் பல்வேறு சமுதாய இயக்கங்கள் அக்கரை காட்டி வருகின்றன.

முதல் கட்டமாக தமுமுக மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து கள ஆய்வை மேற்கொண்டு அதனடிப்படையில் இன்று தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் தலைமையில், மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளனர்.

தமுமுக மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி 'அட்வகேட் ஜைனுலாப்தீன்' உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தொடர்பில் இருக்கின்றனர்.

வக்ப் சொத்து ஆக்கிரமிப்பு செய்தியை அறிந்தவுடன் சவூதி, துபாய் என உலகெங்கிலுமிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதிகளவில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

நேற்றைய தினம், உணர்வு பத்திரிக்கை டீமுடன் களத்துக்கு வருவதாக சொன்ன TNTJ நிர்வாகிகள், ஏனோ வரவில்லை, எனினும் ரமீஸ் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் வருகையை உறுதி செய்து வருகின்றனர்.

எப்போதும் நமது பள்ளி பிரச்சினைகளுக்கு துணைபுரிந்து வரும் SDPI, பாப்புலர் ஃபிரண்ட் சகோதரர்கள் சிலரும் நம்முடன் பேசி நிலவரத்தை தெரிந்து கொண்டதுடன் sdpi கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் மொஹிதீன் தலைமையில் இதுகுறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

'மஜக'வின் பொதுச்செயலாளர் ஹாரூன் ரஷீத், மாநில நிர்வாகி தைமியா, திண்டுக்கல் மாவட்ட மஜக செயலாளர் உள்ளிட்ட பலரும் நம்மோடு பேசி விஷயங்களை தெரிந்து கொண்டபின் இதுவிஷயத்தில் தேவையான நடவடிக்கையை எடுப்பதாக கூறினர்.

முஸ்லிம் லீக் தரப்பிலிருந்து கூட ஒரு சிலர் தொடர்பு கொண்டனர், அதன் மாணவரணி நிர்வாகி ஒருவர் நம்முடன் பேசியதோடல்லாமல் 11-ந்தேதிக்குப் பிறகு அக்கட்சியின் 'எம்எல்ஏ'வை களத்துக்கு அழைத்து வருவதாக கூறியுள்ளார்.

நமது பள்ளி குறித்த முழு விவரங்களையும் நன்கறிந்த 'திருவள்ளூர் இஸ்மாயீல்' அவர்கள் வழக்கறிஞர்கள் பலரிடம் அழைத்து சென்று ஆலோசனை வழங்கி வருகிறார்.

வக்ப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர், உலமா பேரவை கோவை அஷ்ரப் மவுலவி, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள் என பலரும் நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளனர்.

இது தவிர எண்ணற்ற இஸ்லாமிய சகோதரர்களுடன் நமது தொப்புள்கொடி உறவுகள் பலரும் பள்ளிவாசல் சொத்தை மீட்கும் நமது முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறி உற்சாகப் படுத்தி வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

J.ஜாகிர் ஹுசைன்,
தலைவர்
அஹ்மத்ஷா படேமகான் பள்ளிவாசல்,
திருவள்ளூர்.
9380945727
9444781644
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.