திருமணத்துக்கு பிறகு மனைவியை காதலிக்கலாமே!


ஓடி போன பெண்ணின் திருமணதிற்கு பின் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் அந்த பெண் எங்கு போய் அடைக்கலம் தேடுவாள். அவள் வாழ்கையே நாசமாகி விடும். ஆதலால் பெற்றோர் அனுமதி இல்லாமல் பெண் திருமணம் செய்து கொள்ளகூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தால் நல்லது.
ஓடி போன பெண்ணின் திருமணதிற்கு பின் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் அந்த பெண் எங்கு போய் அடைக்கலம் தேடுவாள். அவள் வாழ்கையே நாசமாகி விடும். ஆதலால் பெற்றோர் அனுமதி இல்லாமல் பெண் திருமணம் செய்து கொள்ளகூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தால் நல்லது.
க் கேட்கறதேயில்லை….அட்லீஸ்ட் ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’

திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்ணை காதலன் உள்பட 12 பேர் கற்பழித்த கொடுமை:


அரியானா மாநிலம் கர்னால் ரெயில் நிலையம் அருகில் மயங்கிய நிலையில் கிடந்த ஒரு இளம்பெண்ணை ரெயில்வே போலீசார் நேற்று இரவு மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மயக்கம் தெளிந்த அந்த பெண்ணிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தியதில், கர்னால் மாவட்டத்தை சேர்ந்த அந்த 16 வயது பெண்ணை, நேற்று இரவு 12 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துவிட்டு ரெயில் பாதை அருகே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

என் காதலன் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த வியாழக்கிழமை அழைத்துச் சென்று கற்பழித்துவிட்டான். அதன்பின்னர் அவருடைய கூட்டாளிகள் 11 பேர் ஒன்று சேர்ந்து கற்பழித்தனர் என்று அந்த பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதையடுத்து அந்த பெண்ணின் காதலன் உள்ளிட்ட சிலரை கர்னால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Source: http://www.maalaimalar.com/2012/11/05185645/marriage-desire-run-away-from.html

சினிமாவை உண்மை என்று நம்பி ஏமாறுவதும், காதல் செய்வதே ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்வதும் எந்த அளவு விபரீதங்களை கொண்டு வந்து சேர்க்கிறது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள். திருமணத்துக்கு முன்பே ஆண் பெண் கலப்பதற்கு அரசு ஏதாவது ஒரு கடுமையான சட்டத்தை உண்டாக்கி இது போன்ற பெண்களை காப்பாற்ற வழி வகை செய்ய வேண்டும்.

ஓடி போன பெண்ணின் திருமணதிற்கு பின் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் அந்த பெண் எங்கு போய் அடைக்கலம் தேடுவாள். அவள் வாழ்கையே நாசமாகி விடும். ஆதலால் பெற்றோர் அனுமதி இல்லாமல் பெண் திருமணம் செய்து கொள்ளகூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தால் நல்லது.

—————————————————-

கண்ணூர்: மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். அவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே.

கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.இந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார்.

அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர், போனை எடுத்தார்.

அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். “இளம் காதலன் வருவார்’ என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு, இப்ராகிமை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம்.அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், “இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்’ என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

-பத்திரிக்கை செய்தி

காதலில் இது ஒரு வகை. இந்த பெண்ணை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அறிவியல் வளர்ச்சி நம் பெண்களை எந்த அளவு கொண்டு செல்கிறது என்பதற்கு இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள்.

பிடித்த துணையை தேர்ந்தெடுக்க ஆடவரை தேடும் போது எப்போதும் ஒரு பெண் துணையையோ அல்லது ஒரு ஆண் துணையையோ கூடவே வைத்திருப்பது இளம் பெண்களுக்கு பாதுகாப்பு. அதிலும் காதல் என்று வரம்பு மீறி லாட்ஜ் வரை போகும் இன்றைய காதல்கள் ஆறு மாதத்திலேயே விவாகரத்தை எட்டி விடுகின்றனர். எனவே திருமணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்கள். அதுவே நிலைத்து நிற்கும் அன்பாகும். துணையை தேர்ந்தெடுக்க ஒரு சில கட்டுப் பாடுகளோடு ஆணையும் பெண்ணையும் சந்தித்து தங்களின் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ளுங்கள். சினிமா நிஜம் என்று நம்பி அந்த காட்சிகளை வாழ்விலும் கொண்டு வராதீ
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.