தோழர் பாரூக் படுகொலைக்கும் எந்த இசுலாமிய அமைப்புகளுக்கும் சம்பந்தமில்லை - திருப்பூர் குணாஆறுதல் தரும் பதிவை வெளியிட்ட 'திருப்பூர் குணா'வுக்கு நன்றி..!
முழு உண்மை.

தோழர் பாரூக் படுகொலைக்கும் எந்த இசுலாமிய அமைப்புகளுக்கும் சம்பந்தமில்லை. நாத்திகம் உட்பட எந்த மாற்று கருத்து கொண்டவர்களையும் ஒழித்து கட்டுவதற்கான ஒரு சிறு அமைப்பு கூட இன்றைக்கு இசுலாமியர் மத்தியில் இல்லை. இது தத்துவார்த்த மோதலால் நடந்த கொலையல்ல.

மாற்று மதத்தினர் நடத்திய கொலையுமல்ல. சரண்டரானவர் உட்பட இசுலாமியர் சிலர் செய்த கொலைதான். ஆனால் கொலைக்கான காரணம் மத நம்பிக்கை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் அல்ல.

கொலையாளிகளின் பின்னணி அதிர்ச்சியளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மிகவிரைவில் முழு உண்மையும் சமூகத்தின் முன் அவர்கள் வைப்பார்கள்.

அதற்கிடையே மாற்று கருத்துடையவர்களை கொலை செய்கிற இயக்கம் அல்லது குழு அல்லது நபர்கள் இசுலாமியர்களிடையேயும் இருக்கிறார்கள் என்று எழுதவோ பேசவோ வேண்டாம். அரசியல் சாயம் பூச வேண்டாம்.

இவ்வகையில் இல்லாத ஒரு அமைப்பை குறித்து நேற்று முதல் வருகிற முற்போக்காளர்களின் கருத்துக்களால் வேறொரு தீமை உருவாக்கியுள்ளது. சொந்த சமூகத்தில் வருகிற மாற்று கருத்துகளுக்கே கொலை செய்கிற இவர்களுக்கு இந்து முன்னணி சசிகுமார் கொலைக்கும் சம்பந்தமுள்ளதா என போலீஸ் விசாரிக்கிறது

பார்த்தீர்களா! இசுலாமிய சமூகத்தின்மீது வேறொரு அரசியல் சாயம் பூசி அவர்களை தனிமைப்படுத்தும் பணி தொடங்கியதை. அதற்கு தீனி போட வேண்டாம் தோழர்களே! உரியவர்கள் விரைவில் உங்கள் முன் உண்மையை வைப்பார்கள்....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.