இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRF) கல்விசாலையை அபகரிக்க பாஜக அரசு முயற்சி



தமிழக_அனைத்து_இஸ்லாமிய  அமைப்புகளுக்கான பொது அறிவிப்பு !!

மும்பையில் செயல்பட்டு வரும் IRF நிறுவனத்திற்கு சொந்தமான உலக தரம் வாய்ந்த இஸ்லாமிய நெறிமுறைகளோடு உலக பாடத்திட்டங்களை பயிற்றுவிக்கும் இஸ்லாமிக் இன்டர் நேஷனல் பாடசாலை மற்றும் கல்லூரியை அந்த மாநில பாஜக அரசு கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளது கடந்த சில தினங்களுக்கு முன் IRF இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனமான சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் நிறுவனத்தை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய பாஜக அரசு தடை செய்தது

இந்த தடையை எதிர்த்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் பல நாடுகளின்  அரசியல் பிரமுகர்கள் மற்றும் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர் இந்தியாவில் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் குரல்வளையை நெரிக்கும் வேலையை ராஜ தந்திரத்தோடு மறைமுகமாக மோடி அரசு செய்துவருகிறது

அதை தொடர்ந்து நேற்றைய தினம் மகராஷ்டிர பாஜக அரசு IIS என்ற கல்வி நிறுவனத்தையும் கைப்பற்றப்போவதாக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த அறிவிப்பு அனைத்து மாநிலங்களிலும் இருக்கும்சிறு சிறு இஸ்லாமிய தொண்டு நிறுவனத்திற்கும் இவர்கள் விடுத்த முதல் எச்சரிக்கையாக இது கருதப்படுகிறது  இனி ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்  நிறுவனங்களை தடை செய்வதற்கான முதல் படி இது

தொடர்ந்து இதுபோன்ற அநீதிகளை  இழைத்து வரும் பாஜக அரசை இதுபோன்ற நேரங்களில் நாம் கண்டிக்க தவறினால் இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின்  அனைத்து சுதந்திரமும் இந்த பாசிஸ கயவர்களால் பறிக்கப்பட்டு விடும் என்பதை கூறிக் கொள்கிறோம்

ஸ்பெயினில் இஸ்லாமிய சமூகத்தை அழிக்கப்படும் நேரத்தில் உலகில் இரண்டாவது பெரும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருந்தது ஆனால் அந்த நேரத்தில் அந்த அநீயை  எதிர்த்து கேட்கபதற்கும் வெளி உலகிற்கு தெரியப்படுத்துவதற்கும் இஸ்லாமிய சமூகம் மறந்ததின் விளைவாக ஸ்பெயின் நாட்டில் இருந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வேறருக்கப்பட்டனர்

இந்தியாவில் நல்ல இந்து மக்களோடு கலந்திருக்கும் இந்த பாசிஸ கூட்டத்தின் சூழ்ச்சி திட்டத்தை ஒவ்வொரு இந்து சகோதரர்கள் மத்தியில் அறிவிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அப்படி கொண்டு சென்று அனைத்து தரப்பு மக்களை ஒன்று திரட்டி இதுபோன்ற அநீதிகளை எதிர்க்க நாம் தவறினால்

120 வருட ஸ்பெயின் முஸ்லிம் இன அழிப்பு சம்பவம் இந்தியாவிலும் இந்த பாசிஸ பயங்கரவாதிகளால் நடத்தப்படும் என்பதை வருத்தத்தோடு கூறிக் கொள்கிறோம்

இனி என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பு தீர்மானிக்கட்டும் !!

இந்த செய்தியை படிக்கக்கூடிய சகோதரர் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் பார்வைக்கும் கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்

* தமிழ்நாடு முஸ்லிம் மீடியா *
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.