மட்டன் தம் பிரியாணி| mutton dum biryaniதேவையான பொருள்கள்

பாஸ்மதி அரிசி - 3 டம்ளர்
மட்டன் - அரை கிலோ
தக்காளி - 5
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 00 கிராம்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
புதினா இலை - சிறிதளவு
எண்ணெய் - 150 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன

செய்முறை

அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியை நறுக்கிக் கொள்ளவும்.

மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
புதினாவை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, கிராம்பு ஆகியவற்றை போட்டு லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் 1 ஸ்பூன்
உப்பு மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள்தூள் , தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.

பின் 1 டம்ளர் தண்ணீர் தயிர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்

பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை தண்ணீரை நன்கு வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் உப்பு சரிபார்த்து குக்கரை மூடி வெய்ட் போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.

பின் 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி சூடாக பரிமாறவும். சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.