அதிரையில் TNTJ கிளை-2 சார்பில் தெருமுனைப்பிரசாராக் கூட்டங்கள் ! படங்கள் இணைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் ஏப்ரல் 9 ந் தேதி ( 09-04-2017 ) 'முகமதுர் ரசுலுல்லாஹ்' மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறுவதற்காக TNTJ அதிரை கிளை-1 மற்றும் கிளை-2 சார்பில் அதிரையின் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை, வண்டிப்பேட்டை, ஏ.ஜே நகர் ஆகிய 3 இடங்களில் தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை கிளை-2 தலைவர் பஜால் முகமது தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி,
பதுருதீன், அதிரை அவ்ன் ஆகியோர் கலந்துகொண்டு 'முகம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பலர் கலந்துகொண்டனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.