திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறதுதிருவாரூர் மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக போலியோ சொட்டு மருந்து நாளை (2-ந் தேதி) வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக போலியோ சொட்டு மருந்து நாளை (2-ந் தேதி) வழங்கப்படுகிறது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். சொட்டு மருந்து வழங்க ஊரக பகுதிகளில் 800 முகாம்களும் நகர்பகுதிகளில் 70 முகாம்களுமாக மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

முகாம் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் கொடுக்கப்பட வேண்டும். பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலைப் பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள் , பிற மாநில தொழிலாளர்கள் பொம்மை செய்பவர்கள், இரும்பு வேலை செய்பவர்கள் மீது மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியில் சுகாதாரம் , ஊட்டச்சத்து , ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய் த்துறை, மாணவர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் சொட்டு மருந்து வழங்குபவர் களாகவும் மேற்பார்வையாள ர்களாகவும், கண் காணிப்பாளர் களாகவும் பணியாற்ற உள்ளனர். இப்பணியில் மொத்தம் சுமார் 3480 பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

இந்த பணியனை மேற்பார்வையிட ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 112 மேற்பார்வையாளர்களும், வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும், மாவட்ட அளவில் 8 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 130 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.