அதிரை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது! 3 லட்சம் ரொக்கம், பறிமுதல்தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்திலுள்ள சவுக்குத் தோப்பில் இரவு நேரத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள்கூடி பெரியளவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சூதாட்ட களத்திலிருந்து ரூ. 3 லட்சம் ரொக்கம், பிரமுகர்கள் வந்திருந்த 1 கார், 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்ட கிளப் நடத்தியதாகக் கூறப்படும் முருகேசன், செந்தமிழ் ஆகிய 2 பேரும் தப்பிவிட்டனராம். அவர்களை அதிராம்பட்டினம் போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி: தினமணி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.