போரால் பாதிக்கப்பட்ட ஏமன் மக்களுக்கு சவுதி அரேபிய 150 மில்லியன் டாலர் உதவி !2015 ஆம் ஆண்டு முதல் போரால் ஹவுத்தி ஷியா தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபுநாட்டு கூட்டுப்படைகள் போராடி வருகின்றன. இந்த போரால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்விழந்துள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் மக்களுக்காக சவுதி அரேபியா இதுவரை 8.2 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது, அதன் தொடர்ச்சியாக தற்போது 150 மில்லியன் டாலரை மேலதிக உதவியாக வழங்கவுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டில் பேசிய ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியொ குட்டேரஸ், சர்வதேச நாடுகள் இதுவரை 1.1 மில்லியன் டாலர்கள் அளவுக்கு உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதை அதிகரித்து 2.1 மில்லியன் டாலராக உயர்த்தி தர சர்வதேச நாடுகளை ஐ.நா. வலியுறுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.