திருவள்ளூர் வக்ப் நிலப் பிரச்சினை...நாளை(18-04-2017) மீண்டும் RDO விசாரணை..!திருவள்ளூர் படேமகான் பள்ளிவாசலுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்புடைய வக்ப் சொத்து கடந்த 5 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு DRO விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு கடந்த 05-04-17 அன்று முதல் கட்ட விசாரணை நடைபெற்றது.

முதல்கட்ட விசாரணையில், A ரெஜிஸ்டரர் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்களில் வக்ப் சொத்து என்று தெளிவாக இருந்த காரணத்தினால்,
நமது அழுத்தமான கோரிக்கையை ஏற்று மேற்படி இடத்தில் நடந்துவந்த கட்டுமானப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், இதுவே நிரந்தர தீர்வு அல்ல சொல்லப்பட்டு அடுத்தகட்ட விசாரணையை நாளைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

நாளைய விசாரணையின்போது மேலும் சில ஆவணங்கள் பரிசீலக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

மேற்படி வக்ப் சொத்து எவ்வித பிரச்சினையும் இன்றி நம்மிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது வழக்கம்போல ஆக்கிரமிப்புக்காரர்கள் பலன் பெறும் வகையில்,

எளிதில் அணுகமுடியாத, ஏன் எப்படி என்ற கேள்விகள் கேட்கமுடியாத பல அடுக்கு நீதிமன்றங்களின் நீண்ட காத்திருப்பிலேயே....
நமது வாழ்நாட்களை கரைக்க வேண்டியிருக்குமா என்று தெரியவில்லை.

அல்லாஹ் தான் போதுமானவன்..!

ஜாகிர் ஹுசைன்.
தலைவர், படேமகான் பள்ளிவாசல்,
திருவள்ளூர்.

9380945727
9444781644

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.