ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுமா?கருப்பு பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ஒழித்தார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கிடையே மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்ட்ரி ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று தகவல் பரவி வருகிறதே?. அது உண்மையா? என கேள்வி எழுப்பினார்.

மத்திய உள்துறை விவகார இணை மந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது வெறும் வதந்தி தான். ரூ.2,000 கள்ள நோட்டுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய ரூ.2,000 நோட்டுகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே 100 சதவீதம் அதை கள்ள நோட்டாக தயாரிக்க முடியாது. அப்படியே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும் அதை எளிதாக கண்டறியலாம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய எல்லையில் உள்ள மேற்கு வங்காளம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில் தான் அதிக அளவில் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் பிடிபட்டு உள்ளன என்று கூறிஉள்ளார். பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் புதிய கள்ள நோட்டுகள் வங்காளதேசம் எல்லையின் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.