அதிரையில் சாலை விபத்து! 2 பேர் படுகாயம்!அதிரையில் நாளுக்குநாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பல சமூக அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்றையதினம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அப்துல் பரக்கத் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த ரவி என்பவரது பைக்கில் நேருக்குநேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன்காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.