கர்நாடக சட்டசபை இடைத் தேர்தல்: 2 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றிய காங்.! பாஜக ஷாக்அடுத்த வருடம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள கர்நாடகாவில் இந்த இரு இடைத் தேர்தல்களும் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் நஞ்சன்கூடு மற்றும் குண்டல்பேட் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்த பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் தன்னை கைவிட்டதால் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய காங். மூத்த தலைவர் சீனிவாசபிரசாத் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் மைசூரு மாவட்டத்திலுள்ள நஞ்சன்கூடு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது.

அதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், அமைச்சருமான மகாதேவபிரசாத், மாரடைப்பால் காலமானதால், மைசூர் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அவர் எம்.எல்.ஏவாக இருந்த குண்டல்பேட் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு
கடந்த 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் என்.கேசவமூர்த்தியும், பாஜக சார்பில், சீனிவாச பிரசாத்தும் போட்டியிட்டனர். 2013ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்த சீனிவாச பிரசாத், 50,784 வாக்குகளை பெற்றிருந்தார். மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளராக போட்டியிட்ட கேசவமூர்த்தி 41,843 வாக்குகள் பெற்றிருந்தார் இம்முறை ஆளும் கட்சி வேட்பாளராக களம் கண்டிருந்தார் கேசவமூர்த்தி.


அதிர்ச்சி தோல்வி
மதியத்திற்குள் வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியானது. சீனிவாச பிரசாத் 49615 வாக்குகளையும், கேசவமூர்த்தி 67922 வாக்குகளையும் பெற்றனர். 18307 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். தொகுதியில் அதிமாக உள்ள லிங்காயத்து சமூக வாக்குகளை ஈர்ப்பதில் பாஜக தோல்வியடைந்துள்ளது. அந்த சமூகத்தின் மிகப்பெரிய தலைவராக விளங்கும் எடியூரப்பாவே பிரசாரம் செய்தும் பாஜகவால் வெல்ல முடியவில்லை.

மறைந்த அமைச்சர் மனைவி வெற்றி
குண்டல்பேட்டையில் காங்கிரஸ் சார்பில் மகாதேவபிரசாத் மனைவி கீதா போட்டியிட்டார். எனவே இயல்பாகவே அனுதாப ஓட்டுக்கள் அவருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல 12,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் நிரஞ்சன் குமாரை அவர் வெற்றிகண்டார்.

சட்டசபை தேர்தல் ஒத்திகை
அடுத்த வருடம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள கர்நாடகாவில் இந்த இரு இடைத் தேர்தல்களும் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்பட்டன. இரு தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதாதளம் போட்டியிடாமல் காங்கிரசுக்கு ஆதரவளித்தது பாஜக தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி, இதை சித்தராமையா தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.