பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதியலாம்கடந்த ஆண்டுகளை போலவே நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே நேரடியாக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நிரந்தரச் சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாள்களுக்கு, மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை தாங்களின் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம். அந்தந்தத் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது.

இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக, கடந்த ஆண்டு வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிரியர்களுக்குத் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.