ஒன்றரை அடி உயர +2 மாணவர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி-முத்துமாரி தம்பதியரின் மகன் தினேஷ் (17). பிறவியிலேயே உடல் வளர்ச்சி குன்றிய இவர், ஒன்றரை அடி உயரமே உள்ளார். மேலக்கால் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், பொதுத்தேர்வை எழுதிவிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார். தினேஷின் தந்தை அழகர்சாமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் முத்துமாரி கூலி வேலை செய்து இவரையும், இவரது தங்கைகளான திவ்யா, நந்தினி ஆகியோரை படிக்க வைத்து வருகிறார்.

கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் படிக்கும் இவருக்கு ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
பஸ் ஏறுவதற்கு கூட உயரம் தடையாக உள்ள தினேஷை, நண்பர்கள் குழந்தையை போல் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு தேர்வுக்கு அழைத்து வந்தனர். தினேஷ் கூறுகையில், 'மேல் படிப்பு படித்து அரசு வேலைக்கு சென்று எனது குடும்பத்தை காப்பாற்றுவதுடன், பொதுமக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம்' என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.