முத்துப்பேட்டை பேரூராட்சியில் 3வது முறையாக ஏலம் ஒத்திவைப்புதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் மாதம் குளங்கள் மற்றும் இதர ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த ஏலத்தை பேரூராட்சி செயல் அலுவலர் ஒத்திவைத்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன் மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் அதேபோல் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கடைகள் ஏலம் விடுவதாக ஏலதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தபால் மற்றும் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த ஏலம் நிர்வாக காரணத்திற்காக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். மீண்டும் ஏலம் விடுவதாக ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. அதன்படி ஏலத்தை பலரும் எதிர் பார்த்து காத்திருந்தனர்.


இதற்கிடையில் முன்னாள் கவுன்சிலர் நாசர் தலைமையில், மக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அதன் பிறகு ஏலத்தை நடத்த வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் பேரூராட்சியில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் உமாகாந்தன் நடக்க இருந்த அனைத்து ஏலத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார். பின்னர் அதன்படி நடக்க இருந்த ஏலம் நிர்வாக காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.