தீவிரவாத செயற்பாடு.. 32 சவூதி நாட்டவர்கள் உற்பட 46 பேர் சவுதியில் கைது.தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 46 சந்தேக நபர்களை சவூதி காவல்துறை இன்று கைதுசெய்துள்ளது. கைது செய்யப்பட்ட 46 பேரில்,

32 பேர் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், எஞ்சிய 14 பேரும் பாகிஸ்தான், யேமன், ஆப்கானிஸ்தான், எகிப்து, ஜோர்தான், சூடான், ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் என சவூதி அரேபிய பாதுகாப்பமைச்சின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் அல் துருக்கி அவர்கள் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

சவூதி அரேபிய நகரங்களான ஜித்தா மற்றும், ஹராசாத் மாவட்டத்தில் உள்ள நசீம் எனும் நகரத்திலும் இவர்கள் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த வருடம் சவூதி அரேபியாவில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் ஜுலையில் ஜித்தா நகரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது நடத்தப்படவிருந்த தற்கொலை தாக்குதல் அதே போன்று மதீனாவில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நடைபெற்ற தாக்குதல் போன்றவற்றுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதினா பள்ளிவாயலுக்கு அருகில் நடந்த தாக்குதலில் நான்கு பொலிசார் கொல்லப்பட்டும் ஐந்து பேர் காயமடைந்தும் இருந்த அதே வேளை, ஜித்தா வைத்தியசாலை மீது தற்கொலை தாக்குதல் நடைபெறவிருந்த நேரம் எதிர்பாராத விதமாக தற்கொலை அங்கி வெடித்ததில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி கொல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.