ஷார்ஜாவில் 368 கார்கள் சிறைபிடிப்பு!கடந்த 3 மாதங்களில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 120 கார்கள் என இதுவரை சுமார் 368 கார்கள் ஷார்ஜா போலீஸாரின் அதிரடி ரெய்டுகளால் முடக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறிப்பாக கார் ஸ்டண்ட்களில் ஈடுபடுவோர், சட்டவிரோத கார் பந்தையங்களில் ஈடுபடுவோர், பொறுப்பற்ற முறை மற்றும் பிறருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் ஓட்டுபவர்களின் கார்களே இந்த அதிரடி நடவடிக்கைகளில் அதிகம் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் கார் எஞ்சினிலிருந்து அதிகம் சப்தம் ஏற்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டவையும் உண்டு.

இவ்வாறாக 60 நாட்களுக்கு கார் சிறைபிடிக்கப்படுவதுடன் 2000 திர்ஹம் அபராதத்துடன் 23 கரும்புள்ளிகளை சம்பந்தப்பட்ட கார் டிரைவர்கள் பெறவேண்டி இருக்கும். இதே அளவு தண்டனை பிறருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கார்களை இயக்குவோருக்கும் உண்டு.

Source: Gulf News

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.