வேளாங்கண்ணி அருகே பனைமரத்தில் கார் மோதி அரசு ஊழியர் பலி 3 பேர் காயம்நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி சீதாளகோவில் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் தவமணி (வயது35). இவர் நாகை பிற்படுத்தப்பட்ட நலத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் பாலகிருஷ்ணன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பாலகிருஷ்ணனை பார்ப்பதற்காக அவரது தம்பி ஜெயராமன், பாலகிருஷ்ணனின் மனைவி அமுதா, மகன் துவாரககிருஷ்ணன் ஆகியோர் தங்களது உறவினருக்கு சொந்தமான காரில் நாகைக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் நாகைக்கு வந்துள்ளனர். காரை தவமணி ஓட்டியுள்ளார். நாகையில் பஸ் கிடைக்காததால், திருத்துறைப்பூண்டிக்கு சென்று, அங்கிருந்து பஸ் மூலம் செல்ல முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வேளாங்கண்ணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, எதிரில் வந்த ஆட்டோவிற்கு வழி விடுவதற்காக தவமணி காரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனைமரத்தின் மீது கார் மோதியது.

பலி
இதில் தவமணி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தவமணி ஏற்கனவே இறந்து வி்ட்டதாக தெரிவித்தனர். காரில் வந்த மற்ற 3 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.