குட்டையில் மூழ்கி 3 குழந்தைகள் பலி.. திருவாரூர் அருகே சோகம்திருவாரூர் அருகே குட்டை நீரில் மூழ்கி மூன்று சிறுமிகள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே வில்வனம் படுகையில் உள்ள ஒரு சிறிய குட்டையில் ஹரிசுதன் (6) ரீமாஸ்ரீ (12) தரணிகா (7) ஆகியோர் குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக குட்டை நீரில் மூழ்கி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளையாடச் சென்ற குழந்தைகளை வெகு நேரமாக காணவில்லை என பெற்றோர் தேடிச் சென்ற போது மூவரும் குட்டையில் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குட்டையில் மூழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.