500 Kg நிறை கொண்ட இமான் அஹமதுவின் அதிசயிக்கத்தக்க மாற்றம்!



உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் நிறையான எகிப்தைச் சேர்ந்த பெண்மணி இமான் அஹமது, விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட படுக்கையிலிருந்தே விமானத்தில் கிரேன் மூலம் இறக்கப்பட்டு அவர் மருத்துவ மனைக்குக் கொண்டு சொல்லப்பட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அவரது எடை என்ன தெரியுமா...?

அவரது எடை முன்னர் இருந்ததைவிடச் சரி பாதியாகிவிட்டது. ஆமாம்...500  கிலோ கிராம் 250  கிலோ கிராமாகக் குறைந்துவிட்டது. இந்தச் செய்தி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி,  அவருக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் கூட மிக்க மகிழ்ச்சியையளித்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சைஃபி மருத்துவமனையில், மருத்துவர் முஃபஸல் லக்டாவாலாவின் தலைமையிலான மருத்துவர் குழுவினர் இமானுக்கு  எடைக்குறைப்பு அறுவைசிகிச்சையை நடாத்தினர். தொடர்ந்தும் அவருக்குப் பல்வேறு சிகிச்சைகளை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இமான் தற்போது  வீல் சேரில் நீண்ட நேரம் உட்காரக் கூடியதாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. எனினும் இளமைப்பருவத்தில் இமானுக்கு  ஏற்பட்ட பக்கவாத நோயினால் உடலின் ஒரு பகுதி முடங்கிப் போயிருப்பதாகவும் அவருக்குப் பேசுவதிலும், உணவுகளை உட்கொள்ளுவதிலும்  கஷ்டங்கள் இருப்பதாகவும் டாக்டர் முஃபஸல்  தெரிவித்துள்ளார்.


தற்போது  இமான் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனது  கின்னஸ் சாதனை பறிபோய்விட்டதைப் பற்றி அவருக்கு எந்தக் கவலைகளும் இல்லை.

இமானின் முன்னைய மற்றும் தற்போதைய தோற்றங்களைப் படங்களில் காணலாம்.

-எஸ். ஹமீத்-

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.