இந்துமுன்னணி ராஜகோபால் கொலைவழக்கு: "குற்றமற்றவர்" என தீர்ப்பு 6 இஸ்லாமியர்கள் விடுதலைமதுரை இந்துமுன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் ராஜா உசேன், சீனி நைனார் முகமது, சாகுல் அமீது , ஜாகீர் உசேன், முகமது சுபைர், அஜீஸ் ஆகிய முஸ்லீம் இளைஞர்களை அன்றைய ஜெயா அரசு தடா சட்டத்தில் கைது செய்தது .

20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு  இது புனையப்பட்ட வழக்கு என்று உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருக்கிறது.

இந்த தகவலை பதிவு செய்த தோழர் சம்சுதீன் ... “ஏன் சார் இஸ்லாமியர்களுக்கு மட்டும் முதலில் தண்டனை வழங்கிவிட்டு பிறகு தீர்ப்பை எழுதறாங்க..?” என்று கேட்டிருந்தார். வலிமிகுந்த கேள்வி அது.

விசாரணை அதிகாரி தனக்கு தமிழ் தெரியாது என்றும், ஆவணங்களை படித்துப் பார்க்கவில்லை என்றும் கூறியிருப்பது முதல் அதிர்ச்சி.

தடா வழக்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பார் முன்நிலையில்தான் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டு கடைப்பிடிக்கவேண்டிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது இரண்டாவது அதிர்ச்சி.

அடையாள அணிவகுப்பு என எந்த முறைகளும் பின்பற்றாமல் கைது நடந்துள்ளது.

மேற்படி வழக்கின் அரசியல் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த வழக்கு உள்ளிட்டு குறிப்பிட்டுத்தான் பாஜகவும், சங்க பரிவாரங்களும் பல ஆர்ப்பாட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ‘தங்கள் அமைப்பின் தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக மக்களிடம் பேசி வந்தார்கள்.

உண்மையான கொலைகாரர்களை 20 ஆண்டுகளுக்கு பின் தேடத் தொடங்குமா காவல்துறை? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க.

முஸ்லிம் என்றாலே பயங்கரவாதி என்பதாக  விதைக்கப்படும் நச்சு - சிலருக்கு வாடகை வீடுகளை மறுக்கிறது - சிலருக்கோ 20 ஆண்டுகால வாழ்க்கையை காவுவாங்கியிருக்கிறது. முஸ்லிம் சிறைக் கைதிகளின் பிணை கூட சிக்கலாக இருக்கும் இந்தியச் சூழலில் இதுவொரு மிக முக்கியமான தீர்ப்பாகும்.

நன்றி: தினமணி - தமிழகம் (30.04.2017)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.