ஷார்ஜாவில் ஒரே வாரத்தில் சாலையின் குறுக்கே நடந்து சென்ற 894 பேர் பிடிபட்டனர்சாலைகளை கடப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை பயன்படுத்தாமல் சாலையின் குறுக்கே ஒடிக் கடப்பதால் பலர் உயிழக்கவும், உடல் உறுப்புக்களை இழக்கவும் காரணமாக அமைந்துள்ளன.

எத்தனை முறை எச்சரித்தாலும் பாதசாரிகளின் (Jaywalkers) காதுகளில் இவை விழுவதேயில்லை. எனவே, முறையற்ற வகையில் சாலையின் நடுவே சடுகுடு ஆடுவோரை பிடித்து 200 திர்ஹம் அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை ஷார்ஜா போலீஸார் கடுமையாக நடைமுறைப்படுத்த துவங்கியதை அடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 894 பிடிபட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது தலா 200 திர்ஹமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜீப்ரா கிராஸிங் எனப்படும் பாதையில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை தந்து வாகனங்களை நிறுத்தாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதமும் 6 கரும்புள்ளிகளும், பாதசாரிகளின் நடைமேடையின் மீது வாகனங்களை பார்க்கிங் செய்வோருக்கு 500 திர்ஹம் அபராதமும், பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவோருக்கு 200 திர்ஹம் அபராதமும் 3 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என போக்குவரத்து சட்டங்கள் எச்சரிக்கின்றது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.