சிரியாவில் உள்ள அப்பாவி குடிமக்களை ரசாயன தாக்குதல் நடத்தி கொன்ற ராணுவ அதிகாரிசிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் ரசாயன தாக்குதல் நடத்தியதில் 87 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு தங்களுடைய ராணுவம் காரணம் இல்லை என ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன.

அதே சமயம், இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் நிகழ்த்தவில்லை என சிரியா அரசும் மறுத்துள்ளது. இந்நிலையில், சிரியா மீது ரசாயன தாக்குதலை நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தான் என்பது தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அலெப்போ நகர் எம்.பியானபெரிஸ் ஷிஹாப் என்பவர் சமூக வலைத்தளத்தில் சில பரபரப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ரசாயன தாக்குதலை நடத்தியவரான முகமது கசவுரி என்பவர் தன்னுடைய உயர் அதிகாரியுடன் சேர்ந்து கை குலுக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக விமானத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமில்லாமல், கடந்த மார்ச் மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை என சிரியா கூறி வரும் நிலையில் தற்போது ஆதாரப்பூர்வமாக அவரது ராணுவ வீரரின் புகைப்படம் வெளியாகியுள்ளது சிரியா அதிபரான ஆசத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.