எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பற்றி அவதூறாக பேசியதாக எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அவரது உருவ பொம்மை எரிப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மடப்புரம்சம்பத் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், பாலாஜி, சுகுமார், நகர தலைவர்கள் எழிலரசன், சாம்பசிவம், மாணவர் காங்கிரஸ் மாநில நிர்வாகி ராஜா, நாகை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் ரமேஷ், திருவாரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.