மாட்டிறைச்சி சாப்பிடுவதை விடுங்கள், முத்தலாக் ஷரியத்திற்கு எதிரானது - பாஜவுக்கு கூஜா தூக்கும் அஜ்மீர் தர்கா திவான்இந்தியாவில் புகழ்பெற்ற இஸ்லாமிய தர்காக்களில் ஒன்றான அஜ்மீர் தர்காவின் தலைவர் அபிதின் கான், இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளார், முத்தலாக் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறிஉள்ளார்.

“கவாஜா மொய்னுதீன் ஹாசன் சிஸ்டேவின் 805-வது உருஷ் விழாவில், அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அமைதியாக ஒன்றிணைந்திருப்பதற்கு வாழ்ந்தவர், நாம் (இஸ்லாமியர்கள்) நம்முடைய இந்து சகோதர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிட வேண்டும். “என்னுடைய குடும்பத்தார் மற்றும் நான் ஒரு உறுதி மொழி எடுத்து உள்ளோம், நாங்கள் இனி எங்களுடைய வாழ்நாளில் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டோம் என்று,” என அபிதின் கான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பிற மாநிலங்களிலும் இந்நடவடிக்கையானது பரவ தொடங்கியது. விமர்சனங்கள் எழுந்தாலும் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பா.ஜனதா அரசுகள் நியாயப்படுத்தியது. இந்நிலையில் அஜ்மீர் தர்காவின் தலைவர் இவ்வாறு அறிக்கை விடுத்து உள்ளார். குஜராத்தில் பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இச்சட்டத்தினை அபிதின் கான் வரவேற்று உள்ளார்.

குஜராத் அரசு கொண்டு வந்து உள்ள சட்டம் பசுக்களை இறைச்சி மற்றும் பிற தேவைக்காக கொல்வதற்கு தடையை எற்படுத்தும் என கூறிஉள்ள அபிதின் கான் பாரத பிரதமர் நரேந்திர மோடி பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்து உள்ளார்.

இஸ்லாமிய மதத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையானது இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு அரசியல்சாசன அமர்வு முன் உள்ளது. இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இம்முறையை ஆதரிக்கிறது. இந்நிலையில் அஜ்மீர் தர்காவின் திவான், முத்தலாக் முறைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார், குர்ஆன் மற்றும் ஷரியத் சட்டம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறிஉள்ளார். முத்தலாக் முறையானது மனித தன்மையற்ற செயல், இஸ்லாமியத்திற்கு எதிரானது மற்றும் பாலின சமத்துவதற்கு எதிரானது இதனை எந்தஒரு கால தாமதமும் இன்றி தடுக்கவேண்டும் என்றும் கூறிஉள்ளார் அபிதின் கான்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.