வெயிலுக்குத் திரும்பும் அமீரக வானிலை!அமீரக தேசிய வானிலை மையத்தின் அறிவித்தலின்படி, அடுத்து வரும் இருநாட்களில் சுமார் 40 C முதல் 42 C டிகிரி வரை வெப்பம் உயருமென்றும் பின் படிப்படியாக குறைந்து ஒரு சில நாட்களுக்கு 28 C டிகிரி வரை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சாராசரியாக 12 C டிகிரி அதிகம் உயரும் இந்த வெப்ப உயர்வால் அமீரகத்தின் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டதாக கருத வேண்டாம் என்றும் இது பருவநிலை மாற்றத்தின் காலம் மட்டுமே.

அதிகாரபூர்வ கோடைகால வெயில் புவியியல் புள்ளிவிபரங்களின்படி ஜூன் 21 ஆம் தேதி அன்று தான் துவங்குவதாகவும், நடப்பு மே மாத வெப்பம் சாராசரியாக 37 C முதல் 38 C டிகிரி வரை நிலவி ஜூன் மாத ஆரம்பத்தில் 40 டிகிரி செல்சியஸ் எனும் அளவை எட்டும். அதேவேளை காற்றின் ஈரப்பதம் 60 வரை இருக்கும்.

இருக்கு ஆனா இல்லை என சொல்வது போல் ஜூன் 21 அன்று தான் வெயில் கொளுத்த துவங்குமாம் அதுவரை சுடுவது ஊலாலாயி வெயிலாம். யப்பா! நேற்றைய வெயிலையே தாங்க முடியலே.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.