ஸ்டூடண்ட்ஸ்... எப்படிப்பட்ட காலேஜை தேர்ந்தெடுக்கனும் தெரியுமா?12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களே எப்படிப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும் என்ற குழப்பமா உங்களுக்கு

எப்படிப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும். கல்லூரியின் தரம் எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்து சேர வேண்டும்.
கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன்பு மாணவ மாணவர்கள் கவனிக்க வேண்டியவைகள்

1. கல்லூரியின் உள்கட்டமைஅமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடனும் கல்லூரி அமைந்திருக்கிறதா என மாணவ மாணவியர்கள் ஆராய வேண்டும்

2. நூலகம் உள்ளதா என அறிய வேண்டும். இன்றையக் காலக்கட்டத்தில் இணையதளத்தில் அனைத்து தகவல்களும் அறிய முடியும் என்றாலும் கல்லூரியில் நூலக வசதி உள்ளதா எனப் பார்க்க வேண்டும். நூலகத்தில் அரிய நூல்கள் காணப்படும். மேலும் நூலகத்தில் உள்ள பல நூல்களை எடுத்து ஆராய்ந்து படிக்கும் போது அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

3. படிக்கக் கூடிய சூழல் அந்தக் கல்லூரியில் உள்ளதா என அறிய வேண்டும். கல்லூரியில் அடிக்கடி போராட்டம், தர்ணா எதுவும் நடந்திருக்கிறதா மேலும்வருடாந்திர வகுப்பு நாள்களில் வகுப்பு ஒழுங்காக நடந்திருக்கிறதா படிக்கக் கூடிய சூழல் உள்ளதா என அறிய வேண்டும்.

4. கட்டமைப்பு வசதிகள், நூலக வசதிகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளனவா என தெரிந்து கொள்ள வேண்டும்.

5. தரமான ஆசிரியர்களை வைத்து வகுப்புக்கள் நடத்தப்டுகின்றனவா. வகுப்புக்கள் ஓழுங்காக நடத்தப்படுகின்றனவா என ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

6. பழைய மாணவர்களின் தேர்ச்சி எப்படி இருக்கிறது. நல்ல மார்க்குகளை வாங்கி கடந்த வருட மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனரா என ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

7. முந்தைய வருட மாணவர்கள் நல்ல வேலையில் உள்ளனரா. வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளன, பெரிய நிறுவனங்களில் இருந்து கேம்பஸ் இன்ட்டர்வியூவிற்கு வந்துள்ளனரா, வேலைக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுட்ள்ளனரா என அறிய வேண்டும்.

8. கற்பிக்கும் முறை மற்றும் கற்றல் முறை கல்லூரியில் எப்படி உள்ளது. பிராக்ட்டிக்கல் பாடங்களை கற்பதற்கு தகுந்த ஆய்வுக் கூடங்கள் உள்ளனவா என அறிந்து கொள்ள வேண்டும்.

9. டெக்னாலஜி, மெத்தடாலஜி பொருத்த வரையில் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன எனவும் தெரிந்து கொள்ள வேண்டும். நவீன டெக்னாலஜி முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என தெரிந்து கொள்ள வேண்டும்.

10. கல்லூரியில் பாடங்கள் நடத்தப்படும் முறை எவ்வாறு உள்ளது. வகுப்பறை எப்படி இருக்கிறது, நிர்வாகம் எப்படி உள்ளது, ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர் , கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்த வசதி வாய்ப்புகள் கல்லூரியில் உள்ளனவா என ஆராய்ந்து அறிந்து கல்லூரியை மாணவ மாணவியர்கள் தெரிவு செய்ய வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.