இலங்கையின் ஜனாதிபதி பதவி கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.தாம் கட்சி பொறுப்பை ஏற்று கொண்டது மக்களுக்கு சேவையாற்றவே அன்றி, குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை எதிர்பார்க்க வில்லை.

இலங்கையின் ஜனாதிபதி பதவியையும் எதிர்பார்க்க வில்லை.
எனினும் அவை தானாகவே கிடைத்தது.

எந்த வித நிபந்தனைகளும் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தம்மிடம் வழங்கியவர்கள், கட்சியினை மேம்படுத்துவதற்கு ஏன் இடையூறாக நிற்கின்றார்கள் என ஜனாதிபதி இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

எவர் எவ்வாறான மோசடியில் ஈடுப்பட்டாலும் நாட்டின் நலன் கருதி எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் ஒரு போதும் பின்நிற்க போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.