போக்குவரத்து பொலிஸாரால் காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்ட முகம்மது கைஸர்கிண்ணியா போக்கு வரத்து பொலிஸாரால்  தாக்கப்பட்ட ஒருவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் கிண்ணியா முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்ட்டவர் கிண்ணியா பெரியாற்றுமுனையைச் சேர்ந்த முகம்மது கைஸர் வயது 30 என்ப வராவார்.
இவர் தனியார் (சிங்கர் )கம்பனியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வருகின்றார்.

தனது வீட்டிலிருந்து வாகனமொன்றில் வேகை;குச் செல்லுகின்ற வேளையில்  இடையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில். எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் எதிபாராமல் வந்த போக்குவரத்து பொலிஸ் தன் மீது தாக்கியதாகத் தெரிவிதார்.

இதனை அடுத்து தாக்கப்பட்டவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனினும் கிண்ணியா பொலிஸார் குறித்த பொலிஸ் மீது;இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தாக்குதலுக்குள்ளானவர் தெரிவித்தார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.