திருவாரூர் மாவட்டத்தில் மீன்பண்ணை குட்டை அமைக்க மானியம் விண்ணப்பிக்க அழைப்புதிருவாரூர் மாவட்டத்தில் அரசின் 50 சதவிகித மானிய திட்டத்தில்  மீன்பண்ணை குளங்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மீன்வள உதவி இயக்குனர் உமா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் 50 சதவிகித மானியத்தில்  புதிய மீன்பண்ணைக் குளங்கள், குட்டைகள் அமைத்தல், மீன்வளர்ப்பு குளங்கள், தொட்டிகள் சீரமைத்தல்,  புதுப்பித்தல், நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம்  போன்றவைகளுக்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி ஒரு எக்டேரில் புதிய மீன்பண்ணைக் குளங்கள், குட்டைகள் அமைக்க ஆகும் செலவு தொகை ரூ.7 லட்சத்தில் 50 விழுக்காடு மானியத் தொகையாக ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். ஏற்கனவே உள்ள குளங்கள், தொட்டிகள் சீரமைத்தல், புதுப்பித்தல் போன்றவைகளுக்கு ஆகும்  செலவினத்தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேருக்கு  ஆகும் செலவினத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மேலும் சூரியசக்தியால் இயங்கும் மோட்டார்  காற்றுபுகுத்திகள் அமைத்திட ஆகும் ரூ. 15 லட்சத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் மான்யமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் திருவாரூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மீன்வள உதவி இயக்குனர் உமா தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.