குடிக்க தண்ணீரை பெற்றுத்தாருங்கள் ! வீதிக்கு இறங்கிய பெண்கள் ..



குடிநீரைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி, இன்று (03) கம்பளை - உடபளாத்த பிரதேசசபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.

கம்பளை, தெல்பிடிய, இஜிராகம, நவதேவிட, ஸ்டோபீல் உட்பட எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களை இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, தெல்பிடிய பள்ளிவாசலுக்கு முன்னால் ஆரம்பமாகி உடபளாத பிரதேச சபைக்கு முன்னால் கூடிய பேரணியால், கம்பளை - நுவரெலியா வீதியில் சிறிது நேரம் வாகன நெறிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், பிரதேசசபையின் செயலாளர் பீ.சீ.முத்துகல இந்தப் பிரச்சினை தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளருடன் பேசி, எதிர்வரும் 6ம் திகதி தீர்வைத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்க 2015 ஆண்டு 17 கோடி ரூபா ஒதுக்கியிருந்த போதும், அதிகாரிகளின் அசமந்த போக்கால், சுமார் 400 குடும்பங்கள் இன்று வரை, உரிய குடி நீர் வசதியின்றி கஸ்டங்களை எதிர்கொள்வதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.