அதிரை அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு ( படங்கள் )தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இறந்த நிலையில்  கடல் பசு கரை ஒதுங்கியது.

அதிராம்பட்டினம் அடுத்த அடைக்கத்தேவன் கடலோரத்தில், பங்களாதோப்பு என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை இரவில் இறந்த நிலையில் ஆவேரியா என அழைக்கப்படும் கடல் பசு கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை மற்றும் மீன்வளத்துறை, கடலோரக் காவல்படை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பட்டுக்கோட்டை சரக வனத்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கடலோரக் காவல்படை ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் கரை ஒதுங்கிய கடல் பசுவை பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் குருசாமி அறிவுறுத்தலின் பேரில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வுக்குப் பிறகு, பொக்லைன் எந்திரம் மூலம் கடலோரத்தில் குழி தோண்டி பாதுகாப்பாக புதைக்கப்பட்டது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு சுமார் 1 டன் எடையுள்ள ஆண் கடல் பசு எனக் கூறப்படுகிறது. கடலுக்குள் படகில் மோதியோ உடல்நலக்குறைவு காரணமாகவோ உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்து சில தினங்கள் ஆகியுள்ளதால் உடல் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.

ஆவேரியா எனப்படும் கடல்பசு மீன் இனமாக இருந்த போதிலும் பசுமாடு போல் முக அமைப்பும், பெண் கடல் பசுவுக்கு, பசுமாடு போல மார்பகமும் அமைந்திருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடல் பசுவை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கும் கடல் பசுவை மீனவர்கள் கடலுக்குள் திரும்பக் கொண்டு சென்று விட்டுவிடுவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசுவை மீனவர்கள் மீட்டு, கடலுக்குள் சென்று விட்டனர். இதனைப்பாராட்டி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.