எடையூரில் டாஸ்மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலை மறியல்!எடையூரில் டாஸ்மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு -
கிராம மக்கள் சாலை மறியல்!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மரைக்காகோரையாறு கரையோரம் புதிய டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இந்த கடை பாண்டி கிராமத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பதிலாக அமைக்க படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தும் டாஸ்மாக் நிர்வாகம் கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய நிர்வாகி வினோத் ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் எடையூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். இதனையறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் உதயக்குமார், எடையூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உறுதி கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.