நெடுவாசல் போராட்டக் குழுவினர் அதிரடி அறிவிப்பு..!ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து முன்பைவிட வலுவான போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காவிரி தீர்ப்பாயத்தை கலைக்க கூடாது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுசார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு காவிரித்தாய் காப்பு முற்றுகை போராட்டம் 7வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அப்போது போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்த நெடுவாசல் போராட்டக் குழுவினர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 6 அல்லது 7ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் கூறினர். முன்பைவிட மிகவும் வலுவானதாக இந்த முறை போராட்டம் அமையும் என நெடுவாசல் மக்கள் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.