அமெரிக்கா தடையை சமாளிக்க எமிரேட்ஸ் விமானங்களில் லேப்டாப் சேவை !7 வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கியை சார்ந்த மொத்தம் 10 விமான நிலையங்களிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்களில் மொபைல் போன் மற்றும் அவசரகால மருத்துவ கருவிகள் தவிர்த்து லேப்டாப், டேப்லட் போன்ற மின்னனு பொருட்களை விமானத்தினுள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு தடையை பிரிட்டனும் விதித்துள்ளது என்றாலும் ஒருசில வளைகுடா நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கும் அளித்துள்ளது.

இந்தத் தடையால் பயணிகள் பெரிதும் அவதியுறுவதை தவிர்க்க விமான நிலையங்களின் லாவுஞ்ச் வரை லேப்டாப்களை பயன்படுத்திக் கொள்ளவும் பின் விமான ஏறுமுன் அந்த மின்சாதனங்களை சேகரித்து முறையாக பேக்கிங் செய்து அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கும் போது திருப்பித்தந்து வருகின்றனர்.

தற்போது முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் ஆரம்பமாக எமிரேட்ஸ் விமானத்தினுள் கைமாற்று கடனாக (Lending service) லேப்டாப்கள் மற்றும் டேப்லட்களை வழங்கி வருகின்றனர். இதில் பயணிகள் தங்களுடைய USBகளை உபயோகித்து பயன்படுத்தி விட்டு விமானம் தரையிறங்குமுன் திருப்பித் தர வேண்டும்.

இதேபோல் கடந்த வாரம் முதல் கத்தார் விமான நிறுவனமும் தனது பிஸ்னஸ் வகுப்பு பயணிகளுக்கு லேப்டாப்களை வழங்கிவருகிறது. எதிஹாத் விமான நிறுவனம் இலவச WIFI வசதியுடன் தனது பிரிமியம் வகுப்பு பயணிகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் இந்தத் தடை மேலும் பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் (Homeland Security Secretary ) ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.